Tuesday 17 March 2015

ஆண்டனியும் சன் மியூசிக் மகாலட்சுமியும்!!


நம்ம மகாலட்சுமி சன் மியூசிக்ல ஓஹோன்னு இருந்த காலமது. காலைல அந்த பொன்ண பார்த்துட்டுதான் பசங்க காலேஜுக்கும் வேலைக்கும் கிளம்பிக்கிட்டு இருந்த காலமது!

அன்னிக்கு பாவம் அந்த பொண்ணுக்கு நேரம் சரியில்லை! காலைல நிகழ்ச்சியின் மொத போன் கால்லே நம்ம ஆன்டனி கிட்ட இருந்து வருது! கவணிங்க அந்த பச்ச புள்ளைய நம்ம ஆண்டனி படுத்துற பாட!!

ஆண்டனி: ஹலோ வணக்கம்!!

மகா: வணக்கம்! சொல்லுங்க...


ஆண்டனி: வணக்கம் தான் சொல்லிட்டேனே எத்தன தடவ சொல்றது??

மகா: அதில்லைங்க...

ஆண்டனி: எதில்லை...

மகா: சரி... நீங்க எங்க இருந்து பேசுறீங்க...?

ஆண்டனி: போன்ல இருந்துதான்!

மகா: சரி! உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?

ஆன்டனி: சினிமா பாட்டுதான்!

மகா: என்ன படத்துல இருந்து?

ஆண்டனி: சினிமா படத்துல இருந்து தான்!!

மகா: ஐயையோ... ஐயையோ... நான் இனிமே இந்த் நிகழ்ச்சிக்கே வர மாட்டேன்!!

பாவம் அதுக்கப்புறம் அந்த பொண்ணு சீரியல்ல நடிக்க வந்துருச்சு!!

0 comments:

Post a Comment