ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து தமிழ் திரையுலகின் நடிகரும், திரைப்பட இயக்குனரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ராஜேந்தர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதில், சென்னை ஜல்லிக்கட்டு வன்முறையில் தீவிரவாதிகளும் சமூக விரோதிகளும் ஊடுறுவியதாக தமிழக அரசு கூறிவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதனே சந்தேகத்தை எழுப்பினார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் திமுக செயல்தலைவரும்,சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான நண்பர் ஸ்டாலின் ஆகியோர் மர்மம் குறித்து வெள்ளை அறிக்கை கோரினர். அப்படியிருந்தும், அம்மாவின் மர்மத்தையே அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த மர்மத்தையா கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று அவர் பேசினார்.
மேலும், மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விடுமுறை என்று கூட பார்க்காமல் பிரதமர் மோடி அவர்கள், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒருவார காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நமது முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ஆனால், தம்பிதுரை அவர்கள் உடனே அதிமுக எம்பிக்களுடன் சென்று பிரதமரை பார்க்க முயன்றபோது அவர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறியது தவறு. இதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்திக்க சென்றால், தம்பிதுரை அவர்கள் டெல்லி சென்றிருப்பாரா என்று கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர்.
இவ்வாறு இவர்களுக்கு உள்ளே உட்கட்சி பூசலை உருவாகியுள்ளது என்றும், ‘‘அதிமுகவில் உட்கட்சிப்பூசல்; அதனால்தான் போலீசாரின் கீறல்’’ என்று தெரிவித்தார்.
மேலும், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள், பதைபதைத்து ஓடியவர்கள் மீனவர்கள் ஆதலால் அவர்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் ஆவேசத்துடன் பேசினார்.
0 comments:
Post a Comment