Sunday 8 March 2015

இதுதான் "இந்தியா" ...!!!



சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை.. !
பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது.. !
சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை.!
ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.. !
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்.. !
ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்.. !
சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.. !
சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.. !
சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.. !
நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்.. !
பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.. !
கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..
கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்.. தேசம் என் இந்தியா.. !I

0 comments:

Post a Comment