Thursday, 9 February 2017

Wednesday, 8 February 2017

Sunday, 29 January 2017

‘‘அதிமுகவில் உட்கட்சிப்பூசல்; அதனால்தான் போலீசாரின் கீறல்’’ டி.ராஜேந்தர் அதிரடி பேச்சு


ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து தமிழ் திரையுலகின் நடிகரும், திரைப்பட இயக்குனரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ராஜேந்தர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அதில், சென்னை ஜல்லிக்கட்டு வன்முறையில் தீவிரவாதிகளும் சமூக விரோதிகளும் ஊடுறுவியதாக தமிழக அரசு கூறிவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதனே சந்தேகத்தை எழுப்பினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் திமுக செயல்தலைவரும்,சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான நண்பர் ஸ்டாலின் ஆகியோர் மர்மம் குறித்து வெள்ளை அறிக்கை கோரினர். அப்படியிருந்தும், அம்மாவின் மர்மத்தையே அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த மர்மத்தையா கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று அவர் பேசினார்.

மேலும், மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விடுமுறை என்று கூட பார்க்காமல் பிரதமர் மோடி அவர்கள், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒருவார காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நமது முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

ஆனால், தம்பிதுரை அவர்கள் உடனே அதிமுக எம்பிக்களுடன் சென்று பிரதமரை பார்க்க முயன்றபோது அவர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறியது தவறு. இதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்திக்க சென்றால், தம்பிதுரை அவர்கள் டெல்லி சென்றிருப்பாரா என்று கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர்.

இவ்வாறு இவர்களுக்கு உள்ளே உட்கட்சி பூசலை உருவாகியுள்ளது என்றும், ‘‘அதிமுகவில் உட்கட்சிப்பூசல்; அதனால்தான் போலீசாரின் கீறல்’’ என்று தெரிவித்தார்.

மேலும், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள், பதைபதைத்து ஓடியவர்கள் மீனவர்கள் ஆதலால் அவர்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் ஆவேசத்துடன் பேசினார்.

இளைஞர்களின் எதிர்பார்ப்பு : சகாயம் கிரீன் சிக்னல், ‘மக்கள்பாதை’ அமைப்பு


ஜல்லிக்கட்டுக்காக சென்னை மற்றம் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

வலைத்தளங்களின் மூலம் ஒன்றிணைந்த மாணவர்கள் போராட்டத்தில் சினிமா பிரபலங்கள், அரசில் தலைவர்கள் என எந்தவித ஆதரவும் தேவையில்லை என்றும் தன்னெழுச்சியாக போராடினார்கள்.

மேலும் மாணவர்கள் தன்னெழுச்சிக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமை தாங்க வேண்டும் என்றும் புதிதாக மாணவர்கள் சகாயம் தலைமையில் கட்சி ஆரம்பித்திருப்பதாகவும் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் சகாயம் ஐ.ஏ.எஸ் வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் மதுரையில் மாணவர்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பு மாநாடு நடத்தியிருக்கிறது. இந்த மாநாட்டில் சகாயம் அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும், தேசிய அக்னி சிறகுகள், இலக்கு, சகாயம் 2016, எழுச்சி தமிழகம் போன்ற மாணவர் அமைப்புகள் ஒன்றாக இணைந்து சகாயம் அவர்களின் மேற்பார்வையில் மக்கள்பாதை என்ற அமைப்பாக உருவாகியிருக்கிறது.

சமூக வலைத்தளத்தில், நீங்கள் சமுதாயத்தில் நீதி, நேர்மை, மற்றும் நியாயத்தை எதிர்பார்ப்பவரா? மாற்றத்தையும் கொண்டுவர துடிப்பவரா? அப்படியெனி “மக்கள் பாதை” யில் இணைய வேண்டிய தருணம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.சகாயம் அவர்களின் வழிகாட்டலில் இந்த மக்கள் பாதை என்ற அமைப்பு வலைத்தளத்தில் செயல்படுவதாகவும், அதில் சகாயம் உரையாற்றும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அரசியல் என்பது சமூகத்தின் ஒரு அங்கம். அரசியலில் நேர்மையை கொண்டுவர நினைப்பவர்கள் முதலில் தொடங்கக்கூடிய இடம் சமூகத்தில் இருந்துதான். இளைஞர்களே இந்த தேர்தல் அரசியலை தாண்டி சமூகத்தை நோக்கி செல்ல வேண்டும்.

எனவே இளைஞர்களே உங்கள் அளப்பறிய ஆற்றலை, அறிவை, சக்தியை சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்த அமைப்பில் நீங்கள் இணைய விரும்பினால் www.makkalpathai.org என்ற இணையதள முகவரியில் முகவரியில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Monday, 26 December 2016

Sunday, 25 December 2016