Saturday 25 July 2015

நகைச்சுவை துணுக்குகள்

சுமார் இரண்டு மணி அளவில் தூக்கத்தில் இருந்த கணவனை எழுப்பி 
அரண்மனை படத்தில் ஹீரோயின் யார்? என்று கேட்டார் மனைவி

கணவன்: ‪#‎ஹன்சிகாமோத்வானி‬ ‪#‎ஆண்டிரியா‬ அப்பறமா ஆங் 
‪#‎லஷ்மி_ராய்‬

மனைவி: ‪#‎சந்திரமுகி‬ படத்தில் ஜோதிகாவின் பெயர் என்ன?

கணவன்: ‪#‎கங்கா‬

மனைவி : நம்ம வீட்டுக்கு எதிரே இருந்த சங்கவி எப்பொது வீட்டை காலி செய்தால் என்று தெரியுமா?

கணவன்: போன புதன்கிழமை தான் இரண்டு மாதம் முடிந்தது... ஓக்கே டியர் இந்த ராத்திரி எழுப்பி இவ்வளவு கேள்வி கேக்குற எதுக்கும்மா செல்லம்

மனைவி: இன்று என்னுடைய ‪#‎பிறந்தநாள்‬

‪#‎Silence‬

‪#‎Pin_drop_silence‬

START MUSIC ... செத்தான்டா சேகரு...👊👊👊😳😳😡😡😡
--------------------------------------------------------------------------------------------------------------------------

பயணி: விமானத்தில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்னமா பண்ணறது?

விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்!
விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்!

பயணி: ஞே ஞே ஞே ஞே !!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென
மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார்.


கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.


மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள். அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்
ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்.


இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல்
மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது
தெரிந்தது. தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள். கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.


அவளுக்கு அழுகையாய் வந்தது. இப்படி பயந்து
அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்கவில்லையே என
மிகவும் வருந்தினாள்.


மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு
கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள்.


ஒரு வழியாக பாலத்தை
கடந்துவிட்டாள். கணவரை
கோபத்தோடு பார்க்கிறாள். அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து
தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

அவள் தன் எண்ணத்தை நொந்தபடி கணவனை அணைத்துக்கொண்டு கதறி தீர்த்தாள்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும். ஆனால் உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரிய வரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தாலும்
அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

81 வயது மூதாட்டிக்குப் பசுமாட்டின் இதயத்திலிருந்து தயாரித்த வால்வைப் பொருத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது..

கோ மாதா, எங்கள் குல மாதா என்று மறு ‘வால்வு’ கொடுத்த பசுவைப் போற்றிப் பாடினாரா?

-------------------------------------------------------------------------------------------------------------------------


"என்னங்க..கல்யாண மண்டபத்திலே பொண்ணை காணோம்னு தேடிகிட்டு இருக்காங்கலாமே..?.."
"நான்தான் அப்போவே சொன்னேனே..பொண்ணு இருக்கிற இடம் தெரியாதுன்னு...!.."


"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர்...'டைனோசரை எல்லாம் சுட்டிருக்காரு..."
"இப்போதான் டைனோசரே கிடையாதே.."
"எப்படி இருக்கும்..?..அதான் சொன்னேனே டைனோசரை எல்லாம் சுட்டுடார்னு..!.."


"ரேஷன் கடையிலே 'பிளட் டெஸ்ட்' பண்ண போறாங்கலாம்."
"ஏன்..எதுக்கு..?.."
"குடும்பத்தில் யாருக்காவது 'சுகர்' இருந்தால், சீனி அளவை குறைக்க போறாங்கலாம்..அதுக்கு தான்..!.."

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.
பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.

ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார்.

“ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்”

“அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?”
“நகராமல் தான் இருக்கிறது”
“உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு.


நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்.”
அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது.


அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது. “நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது”.
எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். “நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்”

மறுமொழி உடனடியாக வந்தது. “ஐயா நான் கப்பல்படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்”
கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

“இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்”
பதில் உடனடியாக வந்தது.


“இது கலங்கரை விளக்கம்”
மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.

ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் இப்படி சில கலங்கரை விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில இருக்கத்தான் செய்கின்றன.
மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.
இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக்குறைவாக தோன்றுவதுண்டு. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல “ஈகோ” பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.
ஒரு ஆங்கிலக் கவிஞன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.
“கடவுளே! உலகில் மாற்ற முடிந்த விஷயங்களை மாற்றும் சக்தியையும்,
மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்,
இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து தெளியும் ஞானத்தையும் எனக்குத் தருவாயாக!”
கடவுளிடம் நாம் வேண்டுவதும் அதுவாகவே இருக்கட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

"பொண்ணு செல்பி பைத்தியம்போல!"
"எப்படி..?"
"கல்யாணப் பத்திரிகையில மணப்பெண் பெயருக்கு முன்னாடி 'திருநிறைச் செல்பி'னு போட்டிருக்காங்களே!"

--------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னாங்க...அந்த டாக்டர் ஊசி போடா வறாரு ஆனா நர்ஸ் தடுக்குறாங்க...??"
"இதுதாங்க தடுப்பூசி..."

--------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க... சரியா?
டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...
பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...
அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.
அப்பா வந்ததும்: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...

அப்பா: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை... என்ன செய்யிறது?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க....
=========================

விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..

0 comments:

Post a Comment