Tuesday 17 March 2015

உன்னத மனிதன் !!



எம்.ஜி.ஆர். காலை வேளையில் வாக்கிங் போவது வழக்கம். செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார்....

தூரத்திலிருந்து வரும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும். அந்த அம்மாளிடம் சென்று, "புட்டு என்ன விலை?' என்று விசாரித்தார் எம்.ஜி.ஆர்.

பாட்டி விலையைச் சொன்னதும், "சரி, நாளைக்கு வரும்போது வாங்குகிறேன்'' என்று கூறி நகர்ந்தார் எம்.ஜி.ஆர்.

"ஏன் தம்பி, இன்னிக்கே வாங்கேன்'' என்றாள் பாட்டியம்மா.

"எனக்கு மட்டுமில்ல...அம்மா, அண்ணன் எல்லாருக்கும் சேர்த்து வாங்கணும். அந்த அளவு காசு கொண்டு வரலே'' என்றார் எம்.ஜி.ஆர்.

""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்தாள் பாட்டி.

"உனக்கு ரொம்ப நம்பிக்கை பாட்டி. நாளைக்கு நான் வரலேன்னு வச்சுக்க...ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்றார் எம்.ஜி.ஆர்.

"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்றாள் பாட்டியம்மா...

இது எம்.ஜி.ஆர். மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். அந்தம்மா சில நாட்கள் கழித்து இடம் மாறிச் சென்றுவிட்டார்....

பல வருடங்கள் கழித்து அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்து வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்தார்......!

உன்னத மனிதன் !!

0 comments:

Post a Comment